அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக எஃகு வேலியை அமைக்கும் முயற்சியில் லிதுவேனியா அரசு இறங்கியுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர்.
ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எஃகு வேலி அமைக்கும் பணியில் லிதுவேனியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
எதிர்வரும் ஆண்டு செப்டெம்பருக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எல்லையில் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தவும் லிதுவேனியா அரசு திட்டமிட்டுள்ளது.
Leave a comment