13 19
இலங்கைசெய்திகள்

இலங்கை வழியாக வாகன இறக்குமதி மோசடி: கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

Share

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சொகுசு சிற்றாந்து வர்த்தகர், ஒருவர் குஜராத்தில் சுங்க வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததில் ஈடுபட்டிருந்த நிலையில், இலங்கையின் மதிப்பில் மொத்தம் 300 கோடி ரூபாய் சுங்க வரியை ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பசாரத் கான் என்ற இந்த வர்த்தகர், பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு சிற்றூந்துகளை, போலியான விலைப்பட்டியல்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி குறைத்து மதிப்பிட்டு வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

ஆரம்ப விசாரணைகளின்படி, உயர் ரக சிற்றூந்துகள், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவை துபாய் அல்லது இலங்கை வழியாக எடுத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், சிற்றூந்துகள் இந்திய வீதி தரநிலைகளுக்கு இணங்க இடது கை ஓட்டத்தில் இருந்து வலது கை ஓட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

பின்னர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குறித்த வாகனங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் கான், குறைந்தது 30 உயர் ரக வாகனங்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, ரோல்ஸ் ரோய்ஸ், காடிலாக் எஸ்கலேட், ஹம்மர் இவி, லிங்கன் நேவிகேட்டர், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் லெக்ஸஸ் உள்ளிட்ட நாட்டின் சில அரிய வாகனங்களும் அவரின் இறக்குமதிகளில் அடங்கியுள்ளன.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...