8 22
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் இல்லத்தில் ஒன்றுகூடிய தமிழ் தேசிய கட்சிகள்

Share

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூரில் அமைந்துள்ள எம். ஏ சுமந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் பிரேம சந்திரன் சிவநாதன் வேந்தன் சிவநாதன் வேந்தன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் தீபன் திலீசின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் பதில் தலைவர் சி.வி. கே சிவஞானம், எம் ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி அதிகார சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...