7 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய றம்பொடை விபத்து! ஜனாதிபதி அநுரவின் செய்தி

Share

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள செய்தியில்,

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்காக “கிளீன் ஶ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...