2 16
இலங்கைசெய்திகள்

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம்

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,984 வாக்குகளை பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 13,385 வாக்குகளை பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,596 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, 9,215 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 3645 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1844 வாக்குகளை பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 758 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி, 662 வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு 1602 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபை
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2650 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 2210 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1696 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7260 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 7033 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 3949 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3870 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2350 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2344 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி, 2293 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 2185 வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு 3340 வாக்குகளை பெற்றுள்ளது.

வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா – வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 2838 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2085 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 1957 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வவுனியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2650 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 2210 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1255 வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 2639 வாக்குகளை பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...