செய்திகள்இந்தியா

கோவேக்சினுக்கு அனுமதி வழங்கியது WHO

Share

இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம் என இந்திய தெரிவித்துள்ளது.

அத்தோடு தடுப்பூசி தொடர்பாக மருத்துவ சோதனை தரவுகளை சமர்ப்பிக்குமாரு உலக சுகாதார அமைப்பு இந்தியாவிடம் கோரியுள்ளது.

மேலும், தடுப்பூசியின் திறன் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு WHO தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தடுப்பூசியின் திறன்குறித்த பரிசோதனை அறிக்கையினை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பியது.

இதனையடுத்து அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு பயன்படுத்தலாமென உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது.

ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ஈரான் உள்பட பல்வேறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனினும் ஒருசில நாடுகள் கேவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சர்வதேச நாடுகள் அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அனுமதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...