5 2
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்‌ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெறுவார்! நாமல்

Share

அநுர குமார தலைமையிலான அரசாங்கத்தின் பதவிக் காலத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்‌ச அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை பெறுவார் என்று நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksha) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பல்வேறு பொய்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது. எங்கள் மீதும் ராஜபக்‌ச குடும்பத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்தார்கள்.

ஆனால் இதே அநுர குமார அரசாங்கத்தின் பதவிக் காலத்துக்குள்ளாகவே மகிந்த ராஜபக்‌ச அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்படுவார்.

அதனை நாங்கள் சாதிப்போம். நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்தவர்கள். மக்கள் நலன் சார்ந்து செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள். இப்போதைக்கு எங்கள் கட்சி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் பாதையில் இந்தக் கட்சி பயணிக்கும். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும். அதன் மூலமாக அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவருவோம்.

இந்தப் பயணத்தில் நாங்கள் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்கவுள்ளோம்.

எந்த ஆதிக்க சக்திகளுக்கும் ஏன் அநுர குமாரவின் அரசாங்கத்துக்கும் அச்சப்பட மாட்டோம் என்றும் நாமல் ராஜபக்‌ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...