5
இலங்கைசெய்திகள்

ஊழல் மோசடிகளை நிரூபித்துக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டு சவால்

Share

நாட்டில் பெரியளவில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தி பரப்புரை செய்கின்றது.எனவே, விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல், இவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் இதை ஒரு சவாலாக அரசு எடுக்க வேண்டும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பொய்கள் மற்றும் வன்மங்களை விதைத்தே தேசிய மக்கள் சக்தி பிரச்சாரம் செய்தது. போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது ஆட்சி அதிகாரம் கிடைத்தும் பழைய பாணியிலேயே பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்.

ஆட்சியும் உங்களிடம் உள்ளது. அதிகாரமும் உங்களிடம் உள்ளது.

எனவே, ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றிருந்தால், அவற்றை நிரூபித்துக் காட்டுங்கள்.

இதை ஒரு சவாலாக அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம். வேகமாக வளர்ச்சியடைந்த நாட்டை தேசிய மக்கள் சக்தியே நாசமாக்கியது. இதற்காக ‘பொய்’ எனும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது” – என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...

Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...