12 3
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

Share

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழு அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

எனினும் குறித்த மடிக்கணினியில் அவ்வாறான வெடிகுண்டுகள் ஏதும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று பரிசோதனைகளின் பின்னர் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...