Landslide in Colombia 11 dead
செய்திகள்உலகம்

கொலம்பியாவில் நிலச்சரிவு- 11 பேர் சாவு

Share

கொலம்பியாவில் நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் சாவடைந்ததாகவும் ,காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அங்கிருந்து அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தர்.

அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...