இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது. இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்ற நிலை உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அத்தோடு நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment