13 22
சினிமாபொழுதுபோக்கு

நானா சைந்தவி வாழ்க்கையை கெடுத்தேன்.? டார்கெட் வச்சு பேசாதீங்க.!

Share

நானா சைந்தவி வாழ்க்கையை கெடுத்தேன்.? டார்கெட் வச்சு பேசாதீங்க.!

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் தனது பள்ளித் தோழியும் காதலியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 ஆண்டுகள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்தது .

கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக திடீரென அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களுக்கு குழந்தை இருக்கும் போது திடீரென பிரிவதாக அறிவித்தது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த படங்களில் அவருக்கு டார்லிங் படத்தை விட அதிக ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்த படம் என்றால் அது பேச்சுலர் படம் தான். அந்த படத்தின் டீசர் வெளியான போதே சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது.

பேச்சுலர் படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை திவ்யபாரதி. பிறகு மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்தார். அதோடு பேச்சிலர் படத்திற்கு பிறகு மீண்டும் திவ்யபாரதி கிங்ஸ்டன் படத்தில் ஜிவி பிரகாசுடன் நடித்தார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு நானா காரணம் என திவ்யபாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி மேம் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு தற்போது அவர்கள் மீண்டும் இணைந்து நடத்தும் கச்சேரிகளை பார்ப்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கும்

அவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாடிய பிறை தேடும் இரவிலே பாடல் எல்லாம் இனிமேல் நம்மை யாரும் போட்டு அடிக்க மாட்டாங்க டார்கெட் பண்ண மாட்டாங்க என்று நினைச்சன்.

ஆனால் இப்போதான் அதிகமா அசிங்கப்படுத்துறாங்க.. அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி என்றும் அவங்க வாழ்க்கையே நான் தான் கெடுத்துவிட்டேன் என பெண்களே அதிகமாக திட்டி வராங்க.. அதையெல்லாம் கேட்கும் போது படிக்கும் போதும் எந்த ஒரு ரிப்ளையும் பண்ணாமல் கடந்து சென்று வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...