5 30
உலகம்செய்திகள்

புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை

Share

புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை

ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன்.

அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம்.

அத்துடன் இந்த விஷயத்தில் மட்டும் அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்,” என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் சந்திக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...