இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் அம்பலம்

Share
2 14
Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் அம்பலம்

இலங்கையில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவது மற்றும் புதுப்பித்துக் கொள்வது என்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தற்போது மாதக்கணக்கில் காத்திருந்து அதனை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை லஞ்சமாக கொடுத்து அதனை பெற்றுக்கொள்ள வசதியான பலர் முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாட்டில் பிரபலமான பலர் இலட்சக்கணக்கில் பணத்தை அன்பளிப்பாக கொடுத்து தமது கடவுச்சீட்டுக்களை உடனடியாக பெற்றுக்கொள்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு சிலர் தமது சந்தோஷத்தின் நிமித்தல் சிறிய தொகையிலான பணத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். எனினும் பெருந்தொகை பணத்தை கொடுத்து முக்கியஸ்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் இரண்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...