இலங்கைசெய்திகள்

திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் கையளிக்க முடியாது: வெளியான அறிவிப்பு

Share
1 9
Share

யாழ்ப்பாணம் (Jaffna)-  திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும்,  அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில  இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

குறித்த கூட்டத்திற்கு , விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ , விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி , அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.

விகாரைக்கு உரிய காணியில் , பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம் , புத்த மெதுரா , போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள் , தியான மண்டபங்கள் , பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...