5
உலகம்செய்திகள்

ட்ரம்பின் நாடுகடத்தல் அழுத்தம்: பேச்சுவார்தைக்கு தயாராகும் முக்கிய நாடு

Share

ட்ரம்பின் நாடுகடத்தல் அழுத்தம்: பேச்சுவார்தைக்கு தயாராகும் முக்கிய நாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்திற்கு மத்தியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அந்நாட்டிற்கான அமெரிக்க தூதரை சந்திக்கவுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும் வெனிசுலாவும் உடைந்த இராஜதந்திர உறவுகள் குறித்து வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டமைந்துள்ள நாடுகளாக பார்க்கப்படுகின்றன.

இரு நாடுகளும் தடைகள், குற்றச் செயல்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டுகளால் முறனான போக்கை கையாண்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த இரு தரப்பு சந்திப்பில், வெனிசுலாவிற்கான அமெரிக்காவின் நாடுகடத்தல் விமானங்கள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் தனது “பெரும் எண்ணிக்கையிலான நாடுகடத்தல்” திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து எவரையும், திரும்பப் பெறபோவதில்லை என தென் அமெரிக்க நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து சர்வதேசம் உற்றுநோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...