5 61
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் (Russia Army) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினரிடம் வடக்கு ஆளுநர் கையளித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் (N. Vethanayagan), புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.)  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதேவேளை ஆளுநர் இங்கு தெரிவித்ததாவது,“தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருப்பதனால் அதற்கான உதவிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகின்றது.

இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்குக் காரணம். வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது.

முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து, இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...