20 33
சினிமாபொழுதுபோக்கு

த்ரிஷா எந்த பிரச்னையும் பண்ணாத நடிகை! இயக்குநர் மகிழ் திருமேனி ஓப்பன் டாக்

Share

த்ரிஷா எந்த பிரச்னையும் பண்ணாத நடிகை! இயக்குநர் மகிழ் திருமேனி ஓப்பன் டாக்

கடந்த 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

அஜித்துடன் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டியளித்த வருகிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் த்ரிஷா எப்படி நடித்துள்ளார் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதில் “She is Professional, எந்த பிரச்சனையும் பண்ணாத ஒரு நடிகை. ஒரு artist-ஆ, அது ஒரு challeging-ஆன ஒரு ரோல்-ஆ அத பாத்தாங்க. இந்த படத்தினுடைய முழுமை அவருக்கு பிடித்திருந்தது. அவங்க என் படங்களை பார்த்துருக்காங்க. அவங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்னுடைய படத்தில் நடிக்க வந்ததற்கு. அவங்களுடைய கதாபாத்திரத்தை திறன்பட உணர்ந்து, அவங்க தனி ஒரு sensibility கொண்டு வந்தாங்க.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...