3 52
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் .. ரகசியத்தை உடைத்த இயக்குநர்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் விஜய். மக்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படும் இவர் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமாவில் இருந்து விலகும் இவர் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 அதாவது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் குறித்து முன்னதாக இயக்குநர் ஹெச். வினோத் பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் 200 % அவருடைய திரைப்படமாக மட்டுமே இருக்கும். மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு கமர்சியல் படமாக இந்த படம் இருக்கும்.

இப்படம் தொடங்குவதற்கு முன்பு விஜய் என்னிடம் ஒரு டிமாண்ட் வைத்தார். அது என்னவென்றால் ‘என் படத்தை அனைத்து வயதினரும் மற்றும் அரசியல் கட்சியினரும் பார்ப்பார்கள்.

அதனால் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் எடுக்காமல் லைட்டான விஷயங்களை மட்டும் வைத்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....