1 54
இலங்கைசெய்திகள்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி தொடர்பில் நீதிமன்று எடுத்த தீர்மானம்

Share

கொழும்பில்(colombo) 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda) தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதிபதி அமல் ரணராஜா(Judge Amal Ranaraja), இன்று (28) வழக்கில் இருந்து விலகினார்.

இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2008 இல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா, பி. குமரன் ரத்தினம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்தே மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி அமல் ரணராஜா, தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அமல் ரணராஜா முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவர் விலகுவதாகவும் நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி மாயாதுன்னே கொரயா தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி புதிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை பிரதிவாதியாகப் பெயரிட முடிவு செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்.

எனவே, சட்டமா அதிபரின் முடிவை செல்லாததாக்குவதற்கான ஒரு சான்றளிப்பு ஆணையை பிறப்பிக்குமாறு அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...