Connect with us

இலங்கை

6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு : பொது மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Published

on

4 49

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்களை வெறும் கண்களால் பார்ப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இது போன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றும் கோள்கள் ஒரே பார்வையில் சந்திக்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படும்.

அந்த வகையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு நேற்று முதல் ஆரம்பமானதுடன் இது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் கூறியதாவது:‘கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை தருகின்றன.

இந்நிகழ்வை, ‘பிளானட்டரி பரேட்’ என்கிறோம். இவற்றை, வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழாது. கடந்த 2022 ஜூனில், ஐந்து கோள்கள் நேர்கோட்டில் வந்தன. தற்போது, ஆறு கோள்கள் வருகின்றன.

அடுத்த மாதம் 28ம் தேதி ஏழு கோள்களை பார்க்கலாம். இதையடுத்து, ஆகஸ்ட் மாத மத்தியிலும், இவ்வாறான நிகழ்வு ஏற்படும்.

அதைத் தொடர்ந்து, 2040ல் தான், இதுபோன்று நிகழும். இவை கிழக்கு – மேற்காக காணப்படும். நட்சத்திரங்கள் போல் மின்னாது. அளவில் சற்று பெரிதாக இருக்கும்.

அதிக பிரகாசத்துடன் காணப்படுவது வெள்ளி கோள். அதைத் தொடர்ந்து, செம்பழுப்பு நிறத்தில் செவ்வாய் கோள் காணப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 23 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.01.2025, குரோதி வருடம் தை மாதம் 10, வியாழக் கிழமை,...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 21 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 21 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...