9 48
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Share

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்றும், சுற்றுலா விசாக்கள் மூலம் தனிநபர்கள் ஓமானில் வேலையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கையிலிருந்து வேலை தேடுபவர்கள் ஓமானில் சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பைத் தேடும்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த பிறகு, ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒக்டோபர் 31, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராயல் ஓமான் காவல்துறையின் அறிவிப்பின்படி, சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் வேலை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஏற்கனவே ஓமானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விசா காலாவதியான பிறகு தங்கியிருப்பவர்கள், வெளியேறுவதற்கு முன் ஓமானில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்குஉட்பட்டவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...