7 36
இலங்கைசெய்திகள்

விடைத்தாள் மதிப்பீட்டுக்கு சட்டையுடன் வந்த ஆசிரியைகளால் சர்ச்சை : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Share

விடைத்தாள் மதிப்பீட்டுக்கு சட்டையுடன் வந்த ஆசிரியைகளால் சர்ச்சை : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் சட்டை அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பிரச்சினைக்குரிய இரு குழுக்களையும் பரீட்சைத் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள மதிப்பீட்டு நிலையத்திற்கு அழைத்து, அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீட்டை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

பன்னிப்பிட்டிய (Pannipitiya) தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர (G.C.E A/L Exam) விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக சட்டை அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், ”நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருந்த போதிலும், மேற்படி ஆசிரியர்கள் சட்டை அணிந்து வந்ததால், பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும், பாடசாலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் இடம்பெற்ற போது அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரவிடம் (Amith Jayasundara) வினவிய போது, இன்று (17) இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...