4 33
இலங்கைசெய்திகள்

ஐசிசி தரவரிசை : பந்து வீச்சில் முன்னேறிய இலங்கை வீரர்

Share

ஐசிசி தரவரிசை : பந்து வீச்சில் முன்னேறிய இலங்கை வீரர்

ஐ.சி.சி(icc) ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில்  இலங்கை அணியின் (sri lanka cricket team)சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சன(Maheesh Theekshana) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

7வது இடத்திலிருந்த தீக்சன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ஐ.சி.சி தரவரிசையில் தீக்ச அடைந்த மிக உயர்ந்த நிலை இதுவாகும்.

நியூசிலாந்துக்கு (new zealand)எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இவ்வாறு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் ஆப்கானிஸ்தானின்(Afghanistan) ரஷீத் கான்(Rashid Khan) முதலிடத்திலும், இந்தியாவின்(india) குல்தீப் யாதவ்(Kuldeep Yadav) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...