8 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்!

Share

தமிழர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்!

அம்பாறையில் (Ampara) ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தண்ணீரில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு பகுதி அருகில் உள்ள ஆலயடிக்கட்டு பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டவர், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிள்ளையுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்து பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் முன்செல்ல பின்னால் மனைவியுடன் பிள்ளையும் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசுடன் இணைந்த பாலத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் தனியாக முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற 32 வயது மதிக்கத்தக்க அப்துல் லத்தீப் இக்ராம் என்பவர் ஆற்றினுள் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விடுமுறை நிமிர்த்தம் நாடு திரும்பி இருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பின்னர் நீரில் மூழ்கியவரை தேடுவதற்கு அப்பகுதியில் நீரோட்டத்தை குறைக்கும் முகமாக தற்காலிகமாக துரிசு மூடிகள் சில உரிய தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய நீர்பாசன திணைக்கள அதிகாரிகளினால் மூடப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பின் மேற்கொண்ட தேடுதலில் நிந்தவூர் காவல்துறையினரின் பிரசன்னத்துடன் கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி, சாய்ந்தமருது ஜனாசா பேரவை அணி மற்றும் நிந்தவூர் தன்னார்வ தொண்டர் அணி என்பன கடும் முயற்சி மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து, சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவு(13) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...