5 32
சினிமாபொழுதுபோக்கு

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல தரமான படங்களை நமக்கு கொடுத்துள்ளார்.

இவருடைய இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வணங்கான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். முதலில் இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அவர் வெளியேறினார். பின் அவருக்கு பதிலாக அருண் விஜய் கமிட்டானார்.

முதல் நாள் இப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து வெளிவந்து வணங்கான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணங்கான் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...