தனது தந்தையின் விடுதலையை கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தமிழ் அரசியல் கைதியின் மகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மாமா என ஆரம்பித்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது அப்பா சதீஸ்குமார் 2008ஆம் ஆண்டு புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
உயிரிழப்போ, வெடிப்பு சம்பவமோ, வெடிப்பை ஏற்படுத்தும் நிலையோ இல்லாத ஒரு விடயத்திற்கு அப்பா ஆயுள் தண்டனை அனுபவிப்பது வேதனையுறச் செய்கிறது.
அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பம் அளித்து உதவுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனதைக் கரைக்கும் கடிதம் இதோ!
Leave a comment