6 26
இலங்கைசெய்திகள்

கனடாவின் புதிய பிரதமர் யார்…! வெளியாகவுள்ள அறிவிப்பு

Share

கனடாவின் (Canada) புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை ஆளும் லிபரல் கட்சியின் (Liberal Party ) தலைவர் சச்சித் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடந்த திங்களன்று (6) தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி தெரிவு செய்வதற்கான செயல்முறையில் ஈடுபட்டுள்ளது.

புதிய பிரதமர் யார் என்பதை அறிவிக்கும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பார்.

இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலுவான மற்றும் பாதுகாப்பான நாடு தழுவிய செயல்முறைக்குப் பின் கனடாவின் லிபரல் கட்சியானது மார்ச் 9ஆம் திகதி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது தெரிவு செய்யப்படும் பிரதமர் கனடா வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...