11 11
சினிமாபொழுதுபோக்கு

22 வருடம் கழித்து என் ஆசை நிறைவேறியுள்ளது.. உற்சாகத்தில் நடிகர் ஜெயம் ரவி

Share

22 வருடம் கழித்து என் ஆசை நிறைவேறியுள்ளது.. உற்சாகத்தில் நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து ஜெயம் ரவி பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகிறது. பட செய்திகள் ஒருபக்கம் இருந்தாலும் அவரது சொந்த விஷயங்கள் குறித்து நிறைய பேசப்பட்டது.

ஆனால் அவரோ எனது சொந்த விஷயம் குறித்து கருத்து கூற யாருக்கும் உரிமை இல்லை, படம் பற்றி பேசினால் கண்டிப்பாக நான் மதிப்பேன் என கூறி இருந்தார்.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் கடும் தோல்வியை சந்தித்தது. அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படம் வெளியாக உள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி-நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

இப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி பேசும்போது, இந்த படத்தின் மூலம் எனது 22 ஆண்டு கனவு பூர்த்தியாகியுள்ளது.

சினிமாவில் நான் தொடர்ந்து நடித்து வந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்க வேணடும் என்பது பெரிய கனவாக இருந்தது. தற்போது இந்த படத்தின் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது என சந்தோஷமாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...