13 7
உலகம்செய்திகள்

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

Share

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது.

HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றே இந்த விவகாரத்தில் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை கர்நாடகா மாகாணத்தில் மூவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் HMPV பரவல் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை பெரிய கவலை எதுவும் எழவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் கடந்த 15 நாட்களில் HMPV பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும் சீனா இதுவரை உண்மையான தரவுகளை வெளியிடவில்லை.

இருமல், காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடக்கத்தில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதிப்பு தீவிரமடைந்தால், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியாக உருவாகலாம் என்றும் வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சாதாரணமாக லேசான அறிகுறிகளின் காரணமாக, சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து அறிகுறிகளைப் பற்றி கவலைப்பட்டால், அவர்கள் தங்கள் பொது மருத்துவரை நாடலாம் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...