5 10
இலங்கைசெய்திகள்

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Share

கனடா (Canada) நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை பதவி விலகல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் சூழலில் அவர் பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் இந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Canada Pm Justin Trudeau Resignation Announcement

அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவைத் தொடர மறுத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சியான என்.டி.பி தெரிவித்துள்ளது.

ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி 27ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை பதவி விலகல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று , தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ எப்போது பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ, பதவியை பதவி விலகல் செய்துவிட்டு உடனடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...