5 8
சினிமாபொழுதுபோக்கு

தளபதி விஜய் படத்திற்கே இப்படியொரு நிலைமையா! வெளிவந்த ஷாக்கிங் தகவல்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் கடைசி படம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வர பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பொதுவாக முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் அறிவிப்பு வெளிவந்தவுடனே, அப்படத்தின் உரிமைகள் ஒன்றின்பின் ஒன்றாக விற்பனை ஆகிவிடும். அதுவும் விஜய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. பிசினஸ் வேற லெவலில் நடக்கும்.

ஆனால், தற்போது விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் OTT உரிமை இதுவரை விற்பனை ஆகாமல் இருக்கிறது என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. OTT சரிவை சந்தித்த நிலையில், முன்னணி நட்சத்திரங்களின் படங்களை அதிக விலைக்கு வாங்க கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளனர்.

இதனால், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் கூட அதிக விலைக்கு விற்பனை ஆவதில்லை. தயாரிப்பு நிறுவனம் கேட்கும் தொகையை விட OTT நிறுவனம் கூறும் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் தான், இதுவரை தளபதி 69 படத்தின் OTT உரிமை விற்பனை ஆகவில்லை என கூறப்படுகிறது.

விஜய் படம் மட்டுமின்றி தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்கள் கூட OTT விற்பனையில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...