26
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவு – வெளியான தகவல்

Share

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவு – வெளியான தகவல்

நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடுப்பனவை செலுத்தும் போது நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 1200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் குழுவொன்று அண்மையில் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்து இந்தக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கு இவ்வருடம் சுற்றுலாத்துறையின் மூலம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...

மஹீல் சேனாரத்ன
இலங்கை

மஹீல் சேனாரத்ன பிணையில் விடுதலை!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...