9 42
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கவுள்ள கண்டங்கள்: விஞ்ஞானிகளின் அதிரவைக்கும் எச்சரிக்கை!

Share

நீரில் மூழ்கவுள்ள கண்டங்கள்: விஞ்ஞானிகளின் அதிரவைக்கும் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் காலநிலை மிக வேகமாக மாற்றமடையும் நிலையில், விஞ்ஞானிகள் அதிரவைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்தது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23ஏ(A23a) என்று பெயரிடப்பட்டதுடன் சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்து வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.

அவ்வாறு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த அந்த மிகப்பெரிய பனிப்பாறை தற்போது உடைய தொடங்கி உள்ளதுடன் நகர தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏ23ஏ பனிப்பாறை மேலும் உடைந்து உருகுவதனால் கடலில் நீர் மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், கடல் நீர் மட்டம் உயர்வதால் பல கண்டங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
buzz
செய்திகள்உலகம்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

download 1
செய்திகள்இந்தியா

ரூ. 25 லட்சம் பரிசு ஆசை: கர்ப்பமாக்கினால் பரிசு என நம்பி ஒப்பந்ததாரர் ரூ. 11 லட்சம் இழந்த சோகம்!

இணையத்தில் நடைபெறும் நூதன மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு விசித்திரமான ஆன்லைன்...

buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...