20 28
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் ஆரம்பமாகவுள்ள கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்

Share

புத்தாண்டில் ஆரம்பமாகவுள்ள கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்

இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்க (Dr. N.S. Kumanayake), பதில் காவல்துறை மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் ஜனாதிபதி செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பன இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...