தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ குயின் ஸ்ட்ரீட் வழியாக பால்கிர்க் ஹை மற்றும் கிளாஸ்கோ குயின் தெருவில் இருந்து அல்லோவா/அபெர்டீன்/இன்வெர்னஸ் ஆகிய சேவைகள் உள்ளிட்ட ரயில் சேவைகளும் இக் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்காட்டிஷ் எல்லைகளில் 12 வெள்ள அபாய எச்சரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹவிக் நதிக்கு அருகில் வசிக்கும் மக்களை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#World
Source – https://www.standard.co.uk/news/uk/scottish-borders-cumbria-police-met-office-kendal-b962974.html
Leave a comment