ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள கலெக்ஷன்… எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இவர்து படம் வெளியாகிறது என்றாலே தமிழகம் திருவிழா கோலமாக மாறிவிடும்.
கடைசியாக இவரது நடிப்பில் துணிவு படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார்.
இப்படமும் நிறைய இடைவேளை விடப்பட்டு படப்பிடிப்புகள் நடந்துவந்தது, டப்பிங் வேலைகளும் நடந்து வந்தது.
படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது, படத்தை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. இதுவரை ஓவர்சீஸில் விடாமுயற்சி படத்திற்காக நடந்த ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 20 லட்சம் கலெக்ஷன் வந்துள்ளதாம்.