16 27
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் அநுர தீர்வு காணாத முயலாத பிரச்சினையில் தமிழ் எம்.பிக்கள் தலையிடுமாறு கோரிக்கை

Share

இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி கடற்றொழிலார்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்துள்ளனர்.

எனவே, தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வை எட்டுவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடற்றொழிலார் சங்க தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வடமாகாண கடற்றொழிலார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமராட்சி வடக்கு கடற்றொழிலார்கள் கூட்டுறவு சங்க சமாசத்தின் முன்னாள் தலைவர் நா. வர்ணகுலசிங்கம், இந்திய கடற்றொழிலார்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவார்களோ என்ற கவலை வடக்கு கடற்றொழிலார்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அனுகுவோம் என்ற வகையிலான கருத்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அங்கு என்ன பேசப்பட்டது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை என்பது குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனவே, நாம் என்ன நினைக்கிறோம் என்றால், மனிதாபிமான காரணங்கள் எனக் கூறி அவர்கள் மீண்டும் எங்கள் கடலுக்கு வருவார்களோ என்ற கவலை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக அமைச்சரிடம் பேசுவதாக குறிப்பிட்டார்.”

கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கடற்றொழிலார்கள் பிரச்சினை முக்கியமானது என இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

“கடற்றொழிலார்கள் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கூட்டாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி அநுர தமது எக்ஸ் சமூக வலைதளத்தில், தம்மிடையேயான உரையாடலில், “சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துவது” குறித்தும் பேசப்பட்டதாக பதிவிட்டிருந்தார். மேலும் இந்திய பிரதமருடன் கூட்டாக பேசும் போது, பாக்கு நீரிணைப் பகுதியில், சட்டவிரோத கடற்றொழிலில் முறைகள் மூலம் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தமது கவலையை வெளிப்படுத்தினார்.

“கடற்றொழிலாளர்கள் விடயம் குறித்த ஆறாவது கூட்டம் அண்மையில் முடிவடைந்ததை வரவேற்ற நாங்கள், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட்டு அணுகுமுறையின் மூலம் நீடித்திருக்கும் வகையில் அணுக வேண்டும் என்பதையும் நாம் கலந்துரையாடினோம்.

சீர் செய்ய முடியாத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இரு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள இழுவைமடி வலையை பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, உடனடியாக அந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன்”.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் டிசம்பர் 20ஆம் திகதி காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தென்னிந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு இரு தரப்பினரும் விரைவாகத் தலையிட ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் உடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா கடற்றொழிலாளர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க கடற்றொழில் சமூகம் தயாராகவுள்ளது என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.

“எங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நான்கு மாவட்டங்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாம் தயவாக கோரிக்கை விடுக்கின்றோம். இந்த கடற்றொழிலாளர் பிரச்சினையை சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடன் தீர்க்க மீனவர் சமூகம் தயாராக இருக்கின்றது.

தமிழக முதலமைச்சருக்கு எழுத்து மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஸ்ரீதரனாக இருக்கலாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருந்தாலும் சரி, ரவிகரனாக இருந்தாலும் சரி, செல்வம் அடைக்கலநாதனாக இருந்தாலும் சரி உங்கள் கடிதத் தலைப்பில் தமிழ் முதலமைச்சருக்கு எழுத்து மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு தயார் என்பதை அறிவியுங்கள்.”

இந்திய கடற்றொழிலாளர் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

“வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 குடும்பங்கள் மற்றும் இரண்டு இலட்சம் மக்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு தமிழ்த் தேசிய மட்டத்தில் செயற்படும் கட்சிகள் மற்றும் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

வடக்கு மாகாண ஆளுருடன் இடம்பெற்ற தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், காணி ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆளுநருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
images 7 4
செய்திகள்உலகம்

கனடாவை நோக்கிப் படையெடுக்கும் அமெரிக்கர்கள்: இடப்பெயர்வு செய்ய விரும்பும் நாடுகளில் கனடா முதலிடம்.

அமெரிக்கக் குடிமக்கள் 2026ஆம் ஆண்டில் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில்...

Image 2025 08 41e4a2510e8ad510f382097329a712cd 16x9 1
செய்திகள்இலங்கை

இலங்கை கண் தானம் உலக சாதனை: 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் உறுதியளிப்பு!

இலங்கையின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2.28 மில்லியனுக்கும் அதிகமான...

articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...