13 22
இலங்கைசெய்திகள்

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

Share

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தை(Jaffna) வந்தடைந்துள்ளனர்.

அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம்(21) விடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின் கரையோரத்தை சென்றடைந்தனர்.

இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று(21) விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...