23 11
இலங்கைசெய்திகள்

மாவைக்கு தமிழரசின் தலைமை – நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

Share

மாவைக்கு தமிழரசின் தலைமை – நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பதவிவிலகல் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Illankai Tamil Arasu Kachchi) மத்திய குழுவில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அதை இடைநிறுத்தித் தடை உத்தரவு பிறப்பிக்கவும், மாவை சேனாதிராஜா தொடர்ந்து கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களின் விவரம் பற்றிய விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று சட்டத்தரணிகளோடு ஆலோசனை கலப்பதில் மாவை சேனாதிராஜா மும்முரமாக இருந்தார் என்று பிறிதொரு தகவல் தெரிவித்தது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...