6 38
இலங்கைசெய்திகள்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

Share

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

அந்தோனிப்பிள்ளை மன்னார் (Mannar) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ 76 வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அம்மறைமாவட்டத்திற்கு மன்னார் மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை புதிய ஆயராக திருத்தந்தை பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தையின் இந்நியமன செய்தி மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோவினால் உத்தியோகபூர்வமாக இன்று (14) மாலை வாசிக்கப்பட்டது.

மேலும், புதிய ஆயராக நியமனம்பெற்ற அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...