12 11
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

Share

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள் நிலையங்களுக்கும் அரசாங்கம் தலையீடு செய்து எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், 70 நிறுவனங்கள் மட்டுமே வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கப்பல் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நல்ல வருமானம் ஈட்டுபவை என கபில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கப்பல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

உரிய முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் என தமது சங்கம், விநியோகஸ்தர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் பற்றி தெரிந்து கொள்ளாது சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவூதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளிலிடமிருந்து இரண்டு மாத கால கடன் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் இருந்த போதிலும் கடந்த அரசாங்கங்க்ள அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என கபில மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...