4 14
இலங்கைசெய்திகள்

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் : ரணிலை சாடும் சுகாதார அமைச்சர்

Share

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் : ரணிலை சாடும் சுகாதார அமைச்சர்

மக்களின் வரிப்பணத்தில் ஓய்வுக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பில் கேலியான கருத்தினை வெளியிடுவது பொருத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) இடம்பெற்ற போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் ரணில் விரமசிங்கவினால், வருடத்துக்கு 250 – 300 அனுமதிப்பத்திரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருமானத்தின் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தனது ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு கேலியான கருத்தினை வெளியிடுவது பொருத்தமற்றது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சாதாரண விடயமல்ல. இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கியதன் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான போத்தல்களால் கிடைக்கப் பெற்ற வரிப்பணத்தை சேமிப்பதற்கும் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுபான போத்தல்களை விற்பனை செய்தமையால் மதுபானசாலை உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கான வரி சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை. அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தவில்லை.

ரணில் விக்ரமசிங்க மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த போது, தனது சகாக்களால் இதுவரை காலமும் செலுத்தப்படாமலிருந்த வரியை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அதேபோன்று அவரது அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த அமைச்சர்களால் நிர்வகித்துச் செல்லப்பட்ட மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரை வரி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு இதுவரை செலுத்தப்படாமலுள்ள வரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

செலுத்தப்படாமலுள்ள வரித்தொகைக்கு பதிலாக அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க முடியும் என்று சட்டத்திலிருந்தால் அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.

ஆனால் துரதிஷ்டவசமாக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே சட்டத்தில் காணப்படுகின்றன. மேலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. தேவையேற்படின் அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிப்பத்திரங்களை வழங்கி மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில், தென்னை வளர்ப்பினை ஊக்குவித்திருந்தால் அல்லது அதற்கு வழங்கிய முக்கியத்துவத்தை நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வழங்கியிருந்தால் இன்று நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது“ என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...