f
சினிமாசெய்திகள்

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

Share

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் வெளிவந்தது.

இதில், ‘கல்கி 2898 ஏடி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது.

அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘ஸ்பிரிட்’ படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.

இந்நிலையில், ஸ்பிரிட் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளாராம்.

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...