15 3
இலங்கைசெய்திகள்

நிறுவனமொன்றின் மதுபான உற்பத்தி உரிமம் அதிரடியாக நீக்கம்

Share

நிறுவனமொன்றின் மதுபான உற்பத்தி உரிமம் அதிரடியாக நீக்கம்

டபிள்யூ.எம்.மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நிறுவனம் மது வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 3% மாதாந்தத் தொகையான 5.7 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் டிசம்பர் (31) க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் மதுவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மது வரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...