23 2
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் அநுர அரசு : குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற வார சபை அமர்வு இன்றையதினம் (03.12.2024) சபாநாயகர் அசோக ரங்வல (Ashoka Ranwala)தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாரு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து ரெிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா?

இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகிறார்கள்.

நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உர மானிய விடயத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரணிலின் பாதையில் பயணிக்காது தேர்தல் மேடையில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்கட்சி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...