20 2
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

Share

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ (Litro) நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாய்விற்கும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை1,482 ரூபாய்விற்கும் விற்பனை செய்யப்படும் அறிவித்துள்ளது.

மேலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு | Gas Price Revision Tomorrow

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படாத நிலையில், இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...