19 2
இலங்கைசெய்திகள்

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவீரர் தின நினைவேந்தல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட கெலும் ஹர்ஷன என்பவருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 30ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருட கொண்டாட்டங்கள் எனக் கூறி சமூக ஊடக கணக்கு மூலம் பரப்பியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்படி, முகநூல் ஊடாக பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தூண்டுதல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 120 மற்றும் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...