4
இலங்கைசெய்திகள்

அநுர தரப்புக்கு வாழ்த்தையும் கூறி மிரட்டலும் விடுத்துள்ள மொட்டுக் கட்சி

Share

அநுர தரப்புக்கு வாழ்த்தையும் கூறி மிரட்டலும் விடுத்துள்ள மொட்டுக் கட்சி

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு பெருன்பான்மை கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு அடிபணிவது ஜனநாயகம் என்றும், தேசிய மக்கள் சக்தி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், அவர்கள் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வாக்களித்தவர்களையும், வாக்களிக்கச் செல்லாதவர்களையும் ஒன்று சேர்க்கும் போது, ​​அங்குதான் பெரும்பான்மை உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...