ஏனையவை
ஐசிசியின் புதிய தரவரிசை! மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஹர்த்திக்
ஐசிசியின் புதிய தரவரிசை! மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஹர்த்திக்
ஐசிசி (ICC) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள் நிலையில் ஐசிசி ரி20 சகலத்துறை வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் துடுப்பாட்ட வீரர்களில் முதல் 10 இடங்களில் திலக் வர்மா (Tilak Varma) இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஹர்திக் பாண்டியாவும் தனது திறமையால் அசத்தினார்.
இதனால் இருவரும் ஐசிசி புதிய தரவரிசையில் சாதனை படைத்துள்ளனர்.
ரி20யில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன், வெள்ளைபந்து கிரிக்கெட்டில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான இடங்களை பிடித்துள்ளனர்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா, துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் முக்கிய பங்கு வகித்தார்.
அதேபோல், இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் திலக் வர்மா இரண்டு சதங்களுடன் 280 ஓட்டங்கள் சேர்த்து ஐசிசி ஆண்கள் ரி20 துடுப்பாட்ட தரவரிசையில் 69 இடங்கள் முன்னேறி முதல் 10ல் இடம் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரி20 தொடரில் திலக் வர்மாவின் அற்புதமான ஆட்டத்தால், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவை (நான்காவது இடம்) பின்னுக்குத் தள்ளி ரி20யில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய துடுப்பாட்டவீரர் திலக் வர்மாவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்திய இந்திய விக்கெட் துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் ரி20 துடுப்பாட்ட தரவரிசையில் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23வது இடத்தில் உள்ளார்.
ரி20 துடுப்பாட்ட தரவரிசையில் ஹென்ரிச் கிளாசென் (59வது இடம்) முன்னேற்றம் கண்டுள்ளார். ஐசிசி ரி20 பந்துவீச்சு தரவரிசையில் இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது சிறந்த தரவரிசையான ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோரும் ரி20 பந்துவீச்சு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் T20, ஒருநாள் தரவரிசையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரி20 துடுப்பாட்ட தரவரிசையில் குசல் மெண்டிஸ் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் மஹீஷ் தீக்சனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை துடுப்பாட்ட வீிரர்கள் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோ ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
நியூசிலாந்தைச் சேர்ந்த வில் யங்கும் இலங்கைக்கு எதிரான தொடர்ச்சியான ஆட்டத்தால் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.